ஜாலம் செய்யும் காலம்.
முட்களிடை சிக்கியும்கிழிபடாது காயங்களின்றிநழுவும் காலம்.உடன் விரையும் நமக்கு உண்டோ
"உள்ள"காயங்களின் கணக்கு ?.
விரைந்தபடியே காலம்
நம் வலிகளை
மறைக்கச் செய்யுது ஜாலம்.
கண்மூடித்தனமாய் விரையும்
காலம்
தீர்ப்புகளையும் வீசிச் செல்கிறது
திருத்தமாய்
யானைகளுக்கும்,பூனைகளுக்கும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக