வெள்ளி, 2 நவம்பர், 2012

மரமேறி

மரமேறி மரமேறி களைத்தவரே ...மனம்
மரத்துப் போய் உடலும்தான் இளைத்தவரே

கர(ம்)மாறி கத்தி இடைக்குப் போனதென்ன ..
கணிணிதான் கையிரண்டில் வந்ததென்ன..

தர(ம்)மாறி தரணியெல்லாம் நாளாச்சு:அதுபோல்
தன்நிலையும் தான்மாற வாடினையோ.

சிரம்தூக்கி மேல்நோக்க சிரமப்பட்டு-கூகிளிலே
செவ்விளநீர் காய்த்த திசை தேடினையோ

புரமொன்றுப் பேசாய் முகம்நோக்கி ஆதலினால்
'பேஸ்புக்கில் புகுந்தனையோ:போர்

அறமென்று 'ட்வீட்டரிலே'அரசுசட்டங்களை
ஆதியோடந்தமாய் அலசி வகுந்தனையோ.

பரம்பொருளே பாரினில் என்னிலை மாற்றென
பாதிவழி நீயமர்ந்து பரமனுக்கு 'மெயில'னுப்ப

துறந்தனைத்தும் ஓய்வெடுக்கா உன் திறம்வியந்து
தென்னைபோல் நீ உயர வாழ்த்துகிறேன்

1 கருத்து:

  1. வாவ்....

    என்ன ஒரு கற்பனை...

    கற்பனை என்றாவது ஒரு நாள் நிஜமாகும் என்ற நம்பிக்கை வரிகளில் மிக அற்புதமாய் தெரிகிறது...

    படம் தான் கற்பனை என்றாலும் கவிதை வரிகளும் சளைக்கவில்லையே....

    ரசிக்கவைத்தது....

    சிந்தனை மிக அபாரம்...

    அன்புவாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு