சனி, 3 நவம்பர், 2012

இறக்கைகள் முளைக்கும் தருணம்.

அழைத்துச் செல்லவந்த
அம்மாவின் இடுப்பில் அமர்ந்து
பள்ளியில் நடந்த கதைகளை
மழலையில் குழந்தைக் கூறிவர
தோளிரண்டில் தோன்றின இறக்கைகள்.

வான்வழியே விரைவாக வீட்டை
வந்தடைந்தாள்  தாய்.

2 கருத்துகள்:

  1. மழலையின் மிழற்றல் உலகத்தையே மறக்கவைக்கும் அற்புத ஆற்றல் கொண்டது... சோகங்களை துடைத்துவிடும் அதீத அற்புத சக்தி தருவது என்பது உங்க கவிதை வரிகள் உணர்த்துகிறதுப்பா...

    அழகிய கவிதை வரிகளுக்கு அன்புவாழ்த்துகள்

    பதிலளிநீக்கு