திங்கள், 5 நவம்பர், 2012

அப்பா



அதிரடியாய் எனை கையாண்டு
அன்பை வெளிப்படுத்திய ஆண்தாய்.

தூக்கிப் போட்டு எனைப் பிடித்து
என் பயம் பறக்க வைத்தாய்.

ஞானப் பாலூட்டி எனக்கு
ஞாலம் புரிய வைத்தாய்.

வார்த்தை முள்ளால் தை
த்தாய்.
வாஞ்சையோடுப் பின் அணைத்தாய்.


வேண்டியதை வாங்கித் தந்தாய்-என்னில்
வேண்டாததை நீங்கச் செய்தாய்.

பனிக் குடத்தில் தாய் பத்துமாதம் சுமந்தால்-
பணிகிட்டும் வரை சுமக்க நீ வந்தாய்.

எத்தனை பிறவி எடுப்பினும் தந்தையே
உம்மிடம் பட்ட கடன் மறக்காது சிந்தையே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக