வெள்ளி, 2 நவம்பர், 2012

இல்லறப் பயணம்.

யாரும்
பின்தொடர இயலாமலும்
புரிந்துக் கொள்ள இயலாமலும்
இருந்தது என்னுடைய
இலக்கற்ற பயணம்.

வாய்த்த வாகனமும்
வரப்பிரசாதம்.

செலுத்தும் திசையில
அலுத்துக் கொள்ளாது
சுமந்து என்னை ஓடுவதில்
சுகம் கண்டது .

அசதியும் உண்டு
வசதியும் உண்டு
இருவருக்கும் பயணத்தில்.

அனுசரித்துக் கொள்வதில்
அமைந்து விடுகிறது
எங்கள் வெற்றி.

வரப்போகும் ரசிகர்களின்
கொண்டாட்டத்திற்காகவும்
சந்தோஷத்திற்க்காகவும்
இப்பயணம் இலக்காகிவிடும்போது
வழக்கற்றுப் போகும்
இலக்கற்றப் பயணம் என்பது.

1 கருத்து:

  1. அருமையான சிந்தனைத்துளிகளின் கோர்வை வரிகள்...

    கருத்தும் மிக அருமை....

    நான் என்பதில் ஒட்டுவதில்லை... நாம் என்பதில் தான் மனம் இசைகிறது....

    அனுசரித்து போவதிலும் விட்டுக்கொடுப்பதிலும் வாழ்க்கை சுவாரஸ்யம் ஆகிவிடுவது....

    அவசியங்களை அடிப்போட்டு வேண்டாததை ஒதுக்குவதிலும் வாழ்க்கை ரசிக்கத்தான் செய்கிறது...

    ஒத்துப்போகும் தம்பதியரிடையே வழக்குகள் இருப்பதில்லை வம்புகள் வளர்வதில்லை....

    இருவரின் மனமும் ஒருபோல் சிந்திக்காது போகும்போது தான் பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுப்பது....

    அட்டகாசமான கருத்துள்ள கவிதை பகிர்வுக்கு அன்பு வாழ்த்துகள்பா

    பதிலளிநீக்கு