எங்களை கண்டவுடன்தான் எத்தனை உற்சாகமாய்
ஓடி வருகிறாய் நீ.
கால்கள் நக்குவதும்..
பின்வாங்கி ஓடுவதும்..
மீண்டும் வேகமாய்வந்து
இடுப்பில் தாவி ஏறுவதும்..
நளினமிக்க
நடனம் போல் இருக்கிறது..
கட்டியிருக்கும்வரை கவலையில்லை.
கட்டவிழ்த்துவிட்ட நாளில் நீ செய்த
கபளீகரங்கள் நினைவிலிருப்பதால்
நுரைத் தள்ள ஓடிவரும் வேகத்திற்கு
அனைவரும்
மிக பயந்துதான் போகிறார்கள்.
அவிழ்த்து விடவேண்டாமென்று
வீட்டு சொந்தக்காரரிடம் வேண்டி
விண்ணப்பம் வைப்பதைத் தவிர
வாடகைக்கிருப்பவன் வேறென்ன செய்யமுடியும்..??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக