கடவுளை அழைப்பதற்கும்என் கைபேசியில் எண்ணிருந்தது.
உதவிக்கு அழைத்தபோதெல்லாம்
உடனே உடனே வந்தார்.
பிரச்சனைகளைக் கேட்டுவிட்டு
முடித்துவிடலாம் என்பார்
பெரிதாய் அலட்டிக்கொள்ளாமல்.
தீர்வு சொல்ல அவர்
ஆரம்பிக்குமுன் அடுத்த அழைப்பு.
உடனே உடனே போய்விடுவார்.
இன்னும் எத்தனை புண்ணியவான்களிடம்
இவர் எண் இருக்கிறதோ..??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக