வியாழன், 25 அக்டோபர், 2012

திருத்திச் சொல்.

அம்மாவிடம் எனக்கு
அலாதி பயம் என்று
நான் சொல்வதுபோல் இருந்தது

என் மேல் காதலில்லை என்று
நீ என்னிடம் சொன்னபோது.

அதைவிட உன்
அப்பாவிடம் உனக்கு
அலாதி பயம் என்று கூறியிருக்கலாம்.

ஒன்று தெரியுமா..
உன் உதடுகள்
பொய்யாக உளறினாலும்
உன் விழிகள்
மெய்யை பேசி விடுகின்றன.

3 கருத்துகள்:

  1. ஆமாம் எனக்கும் படத்தை பார்த்தால் அப்டி தான் தெரிகிறது... அடேங்கப்பா என்ன உவமைப்பா....

    அருமையான தொடக்கம்...

    வலைப்பூவுக்கு அன்பு வரவேற்புகள்...

    இனி உங்கள் கவிதைகள் அழகிய தொகுப்புகளாக போடுங்கப்பா...

    அன்புவாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி.இதை தமிழ்மணத்தில் இணைப்பது எப்படி..?

    பதிலளிநீக்கு