பேசமறந்து நீ இருக்கும் தருணங்கள்
உண்மையில் அபூர்வமானவை.
அழகற்றவையாக இருந்தாலும்.
துடிதுடிக்கும் உன் இதழ்களும்
படபடக்கும் உன் இமைகளும்
என் கேள்வியின் பாரத்தை
எனக்கு நன்றாகவே உணர்த்துகின்றன.
எனக்கும் பயத்தையே ஏற்படுத்துகின்றன
உன் மௌனத்தின் பேரிரைச்சல்.
வார்த்தைகளை நீ மென்று விழுங்க
கவிதையாய் அசைகிறது தொண்டைக்குழி.
ஏனோ ரசிக்க விடவில்லை
ரகசியங்களாலான இந்த கணங்கள்.
என்றாவதொரு நாள் எட்ட
நின்றாவது நான் இப்படி கேட்டிடலாமென்று
ஓராயிரம் ஒத்திகைகள் நீயும் பதிலளிக்க
பார்த்துவைத்திருக்கலாம்.
உன் இதழோரம் கசியும் புன்னகை அதை
ஊர்ஜிதபடுத்துவதாகவேப்படுகிறது எனக்கு.

மௌனத்தை உடைத்திடச்சொல்லி கெஞ்சிடும் அழகிய வரிகள்....
பதிலளிநீக்குபெண்களின் மௌனம் ஆண்களுக்கு ஆறுதல் கல்யாணத்திற்கு பின்... :-)
அதுவே பெண்களின் மௌனம் ஆண்களுக்கு அவஸ்தை கல்யாணத்திற்கு முன்.... :)
என்னப்பா நான் சொன்னது சரிதானே??
ஆனாலும் மௌனத்தை ரசித்து எழுதிய வரிகள் சிறப்பு...
தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா இன்னும்...
இணைத்துவிடுங்கள்பா...
அன்புவாழ்த்துகள்...